கவிபாரதி சிறுகதைகள்

Thursday 27 October 2011

சூடு

அன்று மழை நடத்திய போரில் மணிக்கணக்காய் நனைந்திருந்தது பூமி.  நான் ரயிலில் பயணித்து கொண்டிருந்தேன். ஜன்னல் இருக்கையாதலால், கண்ணாடி கதவு வழியாக, மழையை ரசித்து கொண்டிருந்தேன். அன்றைய ரயில் பயணம் எப்போதும் போல போய்க் கொண்டிருந்தது.... சில கிராமங்களை கடந்து, மணல் வெளிகளை கடந்து.... 

அன்று மழை பெய்ததாலோ என்னவோ, வயற்காடுகள் எல்லாம் பசுமையாய்... அழகாய் கண்களில் நின்று, அகல மறுத்தன.. 

ஒவ்வொரு முறை குடுசை பகுதிகளை கடக்கும் போதும், வாசலில் சிறுவர்கள் நின்று கொண்டு ரயிலை பார்த்து, கை அசைத்துக் கொண்டிருந்தார்கள்.. நானும் அப்படி செய்ததுண்டு. யார் யாரென்றே தெரியாத போதும், ரயிலில் பயணிப்போருக்கு கை காட்டி மகிழ்ந்ததுண்டு.... 
இப்போது அந்த கிரமியமும், குழந்தை தனமும் எங்கே போனது... யோசித்தேன், கண்களில் ஏக்கம் பெருகியது. 

அதிலிருந்து மீள்வதற்குள், சிறுமிகள் இரண்டு பேர் குளத்தில் கப்பல் விடுவதை கண்டேன்... சுத்தமான காற்று, சுகமான வாழ்க்கை... அவர்கள் மீது லேசாய் பொறாமை கொண்டேன்...

கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து வரும் கிராமங்களோடு, இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களும் அழிந்து வருகிறதோ?? நினைத்து பார்க்கையில், தலையில் இடி இறங்கியது... 

யோசித்துக் கொண்டே என் நிறுத்தத்தில் இறங்கி, என் தோழியும் நானும் தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்றேன். 

"உலகம் வேப்பமயமாதலையும், நகரமயமாதலையும் தடுக்கவே முடியாதா சுசி ???".... 

"ஏன் இப்போ இத பத்தி கேக்கற?" என்றாள்... 

"இல்ல, நாம வாழறதுக்காக அடுத்த தலைமுறையோட எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கிட்டு வரோம்... இது ஞாயமா சுசி?"

"இன்னிக்கு இந்தியா - இங்கிலாந்த் மேட்ச் இருக்கு பாக்குறியா?" என்றாள்.... 

மரத்தையெல்லாம் வெட்டி சாய்ச்சுடோம்.... தோப்பு துரவுன்னு எல்லாத்தையும் அழிச்சிட்டு வரோம்... இதனால நிறையா தீவுகள் இல்லாம போகறத்துக்கு வாய்ப்பிருக்கு.... மனுஷங்களும், விலங்குளும் இறந்து போகற நிலைமை வரும்.... நம்ம அழிவுக்கு நாமே காரணமா இருக்கனுமா? 

"இப்போ உனக்கு என்ன வேணும்?" சூடா ஒரு கப் காபி குடிச்ச நீ தெளிஞ்சுடுவ..."
நாம் படபடத்து போனேன்.... நான் அனாவசியமாய் பேசுகிறேனோ..? முளை குழம்பியது.... நானும் தினம் தினம் இப்படி யோசிப்பதில்லை.... இன்று ஏன் இப்படி..? புரியவில்லை...  எனக்கு எங்கிருந்து வந்தது பூமி மீது இப்படி ஒரு அக்கறை....கண் மூடி அமர்ந்திருந்தேன்.... காபியும் வந்தது!

"வேற ஏதாவது பேசு" என்றாள் சுசி...

சோர்ந்து போய், காபியை குடிக்க முற்பட்டேன்.... காபியின் வெப்பம், நாக்கில் படர்ந்து.... நெஞ்சை சுட்டது....









No comments:

Post a Comment