கவிபாரதி சிறுகதைகள்

Monday 6 December 2010

அப்பாவுக்காக

கடற்க்கரையோரமாய் காதலர்கள் கூட்டம் நிரம்பிக் கடக்க, அவர்கள் கால்களை மெல்லத் தழுவி நகர்ந்து கொண்டிருந்தது அலை... நதியா தனியாய் அமர்ந்து, மணலில் எதோ வரைந்து கொண்டிருந்தாள்...

நதியா.. ரொம்ப நேரமா காத்திருக்கியா..?? என்றபடி அருகில் வந்து அமர்தான் ஆகாஷ்.

"இல்ல இப்போ தான் வந்தேன்" என்று சொல்லி அமைதியானாள் நதி... ஆகாஷ் அவளை அப்படித்தான் அழைப்பது வழக்கம்.

அந்த மாலை நேரமும் கடற்க்கரை ஓரமும் எல்லா காதலர்களுக்கும் சுகிப்பை தந்து விடுவதில்லையே.. அப்படித்தான் அன்று இவர்களுக்கும் சோகமான மாலைப் பொழுது.

நீண்ட நேர அமைதிக்குப் பின்...

நதி.. நீ உங்க அப்பா சொல்லற மாதிரி அந்த டாக்டர் அரவிந்தையே கட்டிக்கோ...

அவளோ.. காதலனுக்காக தந்தையை மறப்பதா.. இல்லை தந்தைக்காக காதலனை துறப்பதா என போராடிக் கொண்டிருந்தாள்..

ஆகாஷும் நதியும் படித்து ஒரே கல்லூரியில். அவர்கள் காதலுக்கு எப்படியும் ஆறு வயது இருக்கும்.

நதி விவரம் அறிந்த நாளிலிருந்தே தாய் முகம் அறியாதவள். அதனால் அவள் மீது உயிரையே வைத்திருக்கும் அப்பாவுக்காக தன் காதலை மறக்கவும் முடியாமல் தொடரவும் முடியாமல்... திணறிக் கொண்டிருகிறாள். ஒருமுறை அப்பாவிடம் ஆகாஷைப் பற்றி பேச்செடுத்த போது.. அவர் கோபப்பட்ட விதம்... இனி அவள் அவன் பெயரையே எடுக்க முடியாமல் செய்துவிட்டது!

இப்போ என்ன பண்றது... நாம ரெண்டு பெரும் பிரியறது தான் எங்க அப்பாவோட ஆசை... என்ன வேற ஒருத்தருக்கு கட்டி வெச்சுட்டு அவர் வேலையைப் பாத்துட்டு போய்டுவாரு.... அப்புறம் நான் தான் காலமெல்லாம் உனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டத நினைச்சு அழனும்...

என்ற கதறி அழுதவளை தன் தோளோடு சேர்த்துக் கொண்டான்...

எங்க அப்பாவுக்கு அடுத்ததா என் மனசுக்குல ஒருத்தர் இருக்க முடியும்னா அது நீ மட்டும் தான் ஆகாஷ்...

விம்மி விம்மி அழுதவளை வானமும் கடலும் பாவமாய் பார்த்தன..

மனது கனமாகி கண்ணீர் துளிர்க்கும் போது அதை சொல்லி அழுதால் ஓரளவு நிம்மதி கிடைக்கும்... ஆனால், காதலின் வலியை எத்தனை சொன்னாலும் அப்படியே தான் இருக்கும் போலும்...

நதி அழாதடா.. நானும் செதுதுக்கிட்டு இருக்கேன்... உன்ன உங்க அப்பாக்கிட்டேர்ந்து பிரிச்சு கூட்டிட்டு போற அளவுக்கு நான் ஒன்னும்சுயனலவாதி இல்ல...உங்க அப்பா ஏற்க்கனவே ஹார்ட் பேஷன்ட்.... அப்படி அவர கொன்னுட்டு தான் நாம வாழனுமா.... வேண்டாம் நதி...

அந்த நிமிடம் வரை அவளுக்கு தையரியம் சொன்ன அவன்... இப்போது கலங்கினான்...

எதோ ஒரு நினைப்புல.. நீ அந்த டாக்டர் பையன கட்டிக்கோன்னு சொல்லிட்டேன் ஆனா.... உன்னப் பிரிஞ்சு இந்த உலகத்துல ஒரு நிமிஷம் தனியா நிக்குற தையரியம் எனக்கு இல்ல நதி...

அவனது குரல் உடைந்தது!!!

உன்கிட்ட இதுவரைக்கும் நான் ஒண்ணுமே கேட்டதில்ல ஆகாஷ்.... இப்போ ஒன்னு கேக்கனும்னு தோணுது!

கேளுடா...

நீ வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிப்பேன்னு எனக்கு சத்தியம் பண்ணு..

அந்த நீரின் சாட்சியாய் அவன் பொய் சத்தியம் செய்ய விரும்பவில்லை...

இல்ல நதி... நான் இதப்பத்தி அப்புறம் யோசிக்கறேன்...

வழிகிற விழிநீரை துடைத்துக் கொண்டு அவன் எழுந்தாள்.. "சரி அப்பா நானும் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கேன். எங்க அப்பாவுக்கு நான் உன் கூட வாழ்றதுல தான் பிரச்சனை... தனிய வாழ்றதுல இல்லையே... " என்று சொல்லி வேகமாய் நடந்தாள்.

"பாத்துப்போ நதி" அவன் மீண்டும் மணலில் விழுந்தான்...

அவள் ஒருநொடி வேகத்தைக் குறைத்துக் கொண்டு... "நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் ஆகாஷ்.. .அது தான் எனக்கு வேணும்" என்று சொல்லிவிட்டு சென்றாள்.

நதியின் வீட்டில் தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனை... இவள் திருமண பேச்சை எடுப்பதும் அது சண்டையில் முடிவதுமாய், நாட்கள் நகர்ந்தோடின...

ஒருநாள், அவளது அப்பா தற்கொலைக்கு முயல... முற்றிலும் உடைந்து போனாள் நதி...

அப்பா எனக்கு நீங்க வேணும்... இன்னுமொரு தடவ இப்படி பண்ணமாட்டேன் எனக்கு சத்தியம் பண்ணுங்கப்பா...

அன்று அவள் அழுதபோது.. கண்ணீரோடு சேர்த்து அவள் காதலும் சந்தோஷமும் கரைந்து போனதென்று அவளது அப்பா அறியவில்லை..

"ஆகாஷ், உனக்கு எதோ தபால் வந்திருக்கு" என்று சொல்லிக் கொண்டு.. ஆகாஷின் அம்மா அவன் படுக்கை அறைக்கு வருவதை உணர்ந்து, அவன் கையிலிருந்த வளையல் துண்டுகளையும் வாழ்த்தட்டைகளையும் தலையணைக்கடியில் பதுக்கினான்...

என்னம்மா...

உனக்கு எதோ தபால் வந்திருக்கு... இந்தா பிடி... 

கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.

அன்புள்ள என்று எழுதி, அதை அடித்துவிட்டு மரியாதைக்குரிய ஆகாஷுக்கு என்று தொடங்கிய கடிதத்தோடு ஒரு பத்திரிக்கையும் இருந்தது.

நதியாவின் திருமண அழைப்பிதழ்.  "நதியா வெட்ஸ் டாக்டர் அரவிந்த்" என்று அச்சிடப்பட்டிருந்தது.

இறுதியாய்....

நான் உன்னை மறந்துவிட்டேன்... நீயும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்பது மட்டுமே என் ஆசை.. என்ற அவளுக்கு.. என்ன தோன்றியதோ..

உன்னை என்றும் மறவாத நதியா என்று முடித்திருந்தாள்....

ஈரமான விழிகளோடு...

அம்மா... அந்த பொண்ணு வீட்டுக்கு போன் போட்டு எனக்கு சம்மதம்னு சொல்லிடு...

மகனின் மனமாற்றம் அவளுக்கு நிம்மதியை தந்தாலும் அவன் அடைத்திருந்த வேதனைகளை நினைத்து அவளும் துவண்டு போனாள். ஆகாஷ் நதியை பற்றி பேசாத நாளே கிடையாதே. இவன் எப்படி இதை தாங்கிக்கொள்ளப் போகிறான் என்று நினைத்தாலே பயமாய் இருந்தது.

நீ கவலைப் படாதே.... என்று அம்மாவை அணைத்துக் கொண்டான். தாயின் ஸ்பரிசம் அவன் கொண்ட வலிகளுக்கு நிரந்தரமான மருந்தாய் தோன்றியது.

இத்தனைக்குப் பிறகும்... நதி- ஆகாஷின் காதல் தோற்கவில்லை... ஜெய்த்தே இருந்தது :) !!!!

6 comments:

  1. hii superb n cute story...

    ReplyDelete
  2. கதை ஓட்டம் மிக எளிமையா இருக்குங்க... வாசகன் எதிர்பாக்காத ஒரு முடிவ வச்சிருந்தா இன்னும் சிறப்பா இருக்கும்.... முயற்சிக்கு பாராட்டுக்கள்....

    ReplyDelete
  3. வார்த்தைகளை கையாண்ட விதம் அருமைங்க

    ReplyDelete
  4. இயல்பான நடை யதார்த்த முடிவு
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கவிதை போல்
    கதையை செதுக்கிய விதம் அருமை
    தாயிடம் சரணடைந்த எந்த சோகமும் சுமையில்லை
    என்றுணர்த்திய விதம் அருமை நண்பரே

    ReplyDelete
  6. Arputhamaana kadhai.. Kadhalin vali, inbam anaithum, athan tholviyin poluthu unara mudiyum.. Kadhalin vetri ethai tharum endru enaku theriya villai, kadhalin tholviyil... Oru manam

    - GN

    ReplyDelete