கவிபாரதி சிறுகதைகள்

Monday 6 December 2010

அப்பாவுக்காக

கடற்க்கரையோரமாய் காதலர்கள் கூட்டம் நிரம்பிக் கடக்க, அவர்கள் கால்களை மெல்லத் தழுவி நகர்ந்து கொண்டிருந்தது அலை... நதியா தனியாய் அமர்ந்து, மணலில் எதோ வரைந்து கொண்டிருந்தாள்...

நதியா.. ரொம்ப நேரமா காத்திருக்கியா..?? என்றபடி அருகில் வந்து அமர்தான் ஆகாஷ்.

"இல்ல இப்போ தான் வந்தேன்" என்று சொல்லி அமைதியானாள் நதி... ஆகாஷ் அவளை அப்படித்தான் அழைப்பது வழக்கம்.

அந்த மாலை நேரமும் கடற்க்கரை ஓரமும் எல்லா காதலர்களுக்கும் சுகிப்பை தந்து விடுவதில்லையே.. அப்படித்தான் அன்று இவர்களுக்கும் சோகமான மாலைப் பொழுது.

நீண்ட நேர அமைதிக்குப் பின்...

நதி.. நீ உங்க அப்பா சொல்லற மாதிரி அந்த டாக்டர் அரவிந்தையே கட்டிக்கோ...

அவளோ.. காதலனுக்காக தந்தையை மறப்பதா.. இல்லை தந்தைக்காக காதலனை துறப்பதா என போராடிக் கொண்டிருந்தாள்..

ஆகாஷும் நதியும் படித்து ஒரே கல்லூரியில். அவர்கள் காதலுக்கு எப்படியும் ஆறு வயது இருக்கும்.

நதி விவரம் அறிந்த நாளிலிருந்தே தாய் முகம் அறியாதவள். அதனால் அவள் மீது உயிரையே வைத்திருக்கும் அப்பாவுக்காக தன் காதலை மறக்கவும் முடியாமல் தொடரவும் முடியாமல்... திணறிக் கொண்டிருகிறாள். ஒருமுறை அப்பாவிடம் ஆகாஷைப் பற்றி பேச்செடுத்த போது.. அவர் கோபப்பட்ட விதம்... இனி அவள் அவன் பெயரையே எடுக்க முடியாமல் செய்துவிட்டது!

இப்போ என்ன பண்றது... நாம ரெண்டு பெரும் பிரியறது தான் எங்க அப்பாவோட ஆசை... என்ன வேற ஒருத்தருக்கு கட்டி வெச்சுட்டு அவர் வேலையைப் பாத்துட்டு போய்டுவாரு.... அப்புறம் நான் தான் காலமெல்லாம் உனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டத நினைச்சு அழனும்...

என்ற கதறி அழுதவளை தன் தோளோடு சேர்த்துக் கொண்டான்...

எங்க அப்பாவுக்கு அடுத்ததா என் மனசுக்குல ஒருத்தர் இருக்க முடியும்னா அது நீ மட்டும் தான் ஆகாஷ்...

விம்மி விம்மி அழுதவளை வானமும் கடலும் பாவமாய் பார்த்தன..

மனது கனமாகி கண்ணீர் துளிர்க்கும் போது அதை சொல்லி அழுதால் ஓரளவு நிம்மதி கிடைக்கும்... ஆனால், காதலின் வலியை எத்தனை சொன்னாலும் அப்படியே தான் இருக்கும் போலும்...

நதி அழாதடா.. நானும் செதுதுக்கிட்டு இருக்கேன்... உன்ன உங்க அப்பாக்கிட்டேர்ந்து பிரிச்சு கூட்டிட்டு போற அளவுக்கு நான் ஒன்னும்சுயனலவாதி இல்ல...உங்க அப்பா ஏற்க்கனவே ஹார்ட் பேஷன்ட்.... அப்படி அவர கொன்னுட்டு தான் நாம வாழனுமா.... வேண்டாம் நதி...

அந்த நிமிடம் வரை அவளுக்கு தையரியம் சொன்ன அவன்... இப்போது கலங்கினான்...

எதோ ஒரு நினைப்புல.. நீ அந்த டாக்டர் பையன கட்டிக்கோன்னு சொல்லிட்டேன் ஆனா.... உன்னப் பிரிஞ்சு இந்த உலகத்துல ஒரு நிமிஷம் தனியா நிக்குற தையரியம் எனக்கு இல்ல நதி...

அவனது குரல் உடைந்தது!!!

உன்கிட்ட இதுவரைக்கும் நான் ஒண்ணுமே கேட்டதில்ல ஆகாஷ்.... இப்போ ஒன்னு கேக்கனும்னு தோணுது!

கேளுடா...

நீ வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிப்பேன்னு எனக்கு சத்தியம் பண்ணு..

அந்த நீரின் சாட்சியாய் அவன் பொய் சத்தியம் செய்ய விரும்பவில்லை...

இல்ல நதி... நான் இதப்பத்தி அப்புறம் யோசிக்கறேன்...

வழிகிற விழிநீரை துடைத்துக் கொண்டு அவன் எழுந்தாள்.. "சரி அப்பா நானும் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கேன். எங்க அப்பாவுக்கு நான் உன் கூட வாழ்றதுல தான் பிரச்சனை... தனிய வாழ்றதுல இல்லையே... " என்று சொல்லி வேகமாய் நடந்தாள்.

"பாத்துப்போ நதி" அவன் மீண்டும் மணலில் விழுந்தான்...

அவள் ஒருநொடி வேகத்தைக் குறைத்துக் கொண்டு... "நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் ஆகாஷ்.. .அது தான் எனக்கு வேணும்" என்று சொல்லிவிட்டு சென்றாள்.

நதியின் வீட்டில் தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனை... இவள் திருமண பேச்சை எடுப்பதும் அது சண்டையில் முடிவதுமாய், நாட்கள் நகர்ந்தோடின...

ஒருநாள், அவளது அப்பா தற்கொலைக்கு முயல... முற்றிலும் உடைந்து போனாள் நதி...

அப்பா எனக்கு நீங்க வேணும்... இன்னுமொரு தடவ இப்படி பண்ணமாட்டேன் எனக்கு சத்தியம் பண்ணுங்கப்பா...

அன்று அவள் அழுதபோது.. கண்ணீரோடு சேர்த்து அவள் காதலும் சந்தோஷமும் கரைந்து போனதென்று அவளது அப்பா அறியவில்லை..

"ஆகாஷ், உனக்கு எதோ தபால் வந்திருக்கு" என்று சொல்லிக் கொண்டு.. ஆகாஷின் அம்மா அவன் படுக்கை அறைக்கு வருவதை உணர்ந்து, அவன் கையிலிருந்த வளையல் துண்டுகளையும் வாழ்த்தட்டைகளையும் தலையணைக்கடியில் பதுக்கினான்...

என்னம்மா...

உனக்கு எதோ தபால் வந்திருக்கு... இந்தா பிடி... 

கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.

அன்புள்ள என்று எழுதி, அதை அடித்துவிட்டு மரியாதைக்குரிய ஆகாஷுக்கு என்று தொடங்கிய கடிதத்தோடு ஒரு பத்திரிக்கையும் இருந்தது.

நதியாவின் திருமண அழைப்பிதழ்.  "நதியா வெட்ஸ் டாக்டர் அரவிந்த்" என்று அச்சிடப்பட்டிருந்தது.

இறுதியாய்....

நான் உன்னை மறந்துவிட்டேன்... நீயும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழவேண்டும் என்பது மட்டுமே என் ஆசை.. என்ற அவளுக்கு.. என்ன தோன்றியதோ..

உன்னை என்றும் மறவாத நதியா என்று முடித்திருந்தாள்....

ஈரமான விழிகளோடு...

அம்மா... அந்த பொண்ணு வீட்டுக்கு போன் போட்டு எனக்கு சம்மதம்னு சொல்லிடு...

மகனின் மனமாற்றம் அவளுக்கு நிம்மதியை தந்தாலும் அவன் அடைத்திருந்த வேதனைகளை நினைத்து அவளும் துவண்டு போனாள். ஆகாஷ் நதியை பற்றி பேசாத நாளே கிடையாதே. இவன் எப்படி இதை தாங்கிக்கொள்ளப் போகிறான் என்று நினைத்தாலே பயமாய் இருந்தது.

நீ கவலைப் படாதே.... என்று அம்மாவை அணைத்துக் கொண்டான். தாயின் ஸ்பரிசம் அவன் கொண்ட வலிகளுக்கு நிரந்தரமான மருந்தாய் தோன்றியது.

இத்தனைக்குப் பிறகும்... நதி- ஆகாஷின் காதல் தோற்கவில்லை... ஜெய்த்தே இருந்தது :) !!!!

Wednesday 1 December 2010

முதல் காதல்

அழகான காலைப் பொழுதை இன்னும் இனிமையாக்கும்படி சுஜாதா சமயலறையில்  கலறிக் கொண்டு இருந்த கேசரியின் மனம், வீடெங்கும் பரவி, தூங்கிக் கொண்டிருந்த ஹரியின் கம்பளிக்குள் நுழைந்து நாசி தடவியதில், தூக்கம் கெட்டு கண் விழித்தான் அவன்.  இப்படி அம்மாவின் கை மணம் பட்டு கண்விழிக்கும் நாட்களை இனி தவற விடப் போவதை நினைத்தாலே அவன் நெஞ்சம் கனமானது..

ஹரி.. அவனது பெற்றோருக்கு ஒரே மகன். அதற்கே உண்டான செல்லமும் அரவணைப்பும் அளவுக்கு அதிகமாகவே பெற்றிருந்தான். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு, கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அது ஒரு தனியார் கல்லூரி. இவர்கள் இருக்கும் கிராமத்தை விட்டு வெகுதூரத்தில் இருப்பதால், விடுதியில் தங்க வேண்டிய கட்டாயம்.

இதுவரை அவன் கண்டதெல்லாம், அரசு பள்ளியும், ஆலமர நிழலும், அடிக்கடி தடியால் அவனையும் சக நண்பர்களையும் அடித்து அடித்தே பாடம் சொல்லித் தந்த ராமசாமி வாத்தியாரையும் தான். இடைவேளையில் குச்சி மிட்டாயும், குல்பி ஐஸ் தருகிற சந்தோஷத்தையும் தவிர வேறெதையும் அறிந்திடாதவன்.
ஹரியின் தந்தை கதிரேசன்,  அரசுப் பணியில் இருப்பவர். அம்மா சுஜாதா, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த போதிலும் பகுத்தறிவும் சாதூர்யமும் நிறையவே பெற்றிருந்தார்.

" ஹரி" என்று அவனது தந்தை அழைக்க, சட்டேன்று திரும்பிய அவன் கண்களில் அவனை அறியாமலேயே கண்ணீர் திரண்டது.  வீட்டை விட்டு வெளியே போகிற முதல் அனுபவத்தை நினைத்து உடைந்து போயிருந்த அவனை.. தேற்றுவதற்கு முயன்றார் கதிரேசன். 

அப்பா.. நான் அங்க போய் படிக்கல. நான் உங்க கூடயே இருக்கேன்..

ஹரி.. நீ இன்னும் வாழ்கைய சரியா புரிஞ்சுக்கல..  நீ இங்கிருந்து போனா மட்டும் தான் ஒரு நல்ல நிலைக்கு வர முடியும்ங்கற காரணத்தால தான் நானும் அம்மாவும் உன்ன இவ்வளவு தூரம் வர்ப்புறுத்தறோம்.. எங்களுக்கு மட்டும் கஷ்டமா இல்லையா என்ன??

நாட்கள் விரைந்தோடின... ஹரி கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தொடங்கி மூன்று வருடங்கள் ஓடி விட்டன.... இடையிடையே விடுமுறை நாட்களில் ஒரு சில முறை ஊர் பக்கம் சென்று வந்திருந்தான்.. கல்லூரி, விடுதி வாழ்க்கை.. உணவு...என்று எல்லாமே ஓரளவுக்கு பழகிப் போயிருந்தாலும்,   முன்பு இருந்ததைவிட இரண்டு மூன்று கிலோ எடை குறைந்திருந்தான்...

ஒருநாள் அப்பா அவனை பார்க்க வருவதாக சொல்லி இருக்க, அவரை அழைத்துப் போவதற்காக ரயில் நிலையம் சென்றான்...

அன்னையைப் பார்த்து வெகுநாளானக் குழந்தை எப்படி ஓடி வந்து அவள் கால்களை பின்னுமோ.. அதுபோல் வேகமாய் வந்து நின்றது ரயில்.

அப்பா... எப்டி இருக்கீங்க..அம்மா உடம்புக்கு ஒன்னுமில்லையே...

ஆசையாய் விசாரிக்கிற மகனை அப்படியே அணைத்துக் கொண்டார் கதிரேசன்.  இப்பொது அவன் டீன்ஏஜ் வயதை கடந்துவிட்டத் தோற்றத்தோடும்.. இளமைக்கே உண்டான அழகோடும் கம்பீரத்தோடும் இருபதைப் பார்த்தவர்... தனக்குள் சிரித்துக் கொண்டார்.

நாங்க ரெண்டுபேரும் சௌக்கியமா இருக்கோம்.. நீ எப்டி இருக்க..  ரொம்ப தளர்ந்து போய் இருக்க.. என்ன ஆச்சு ?

அது எல்லாம் ஒண்ணுமில்ல.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. ஊர்ல எல்ல்லாரும் எப்டி இருக்காங்க..?

நம்ம ராமசாமி வாத்தி, சுஷீலா அக்கா, குமார் மாமா...என அவன் அடுக்கிக் கொண்டே போகையில் அவனது நாக்கில் சிக்கி வெளி வரமுடியாமல் தவித்தது அனிதாவின் பெயர்!  

அனிதா..இந்த பெயருக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு இதுவரை அந்த வானும், நம்மை எல்லாம் சுவாசிக்கச்செய்யும் காற்றையும் தவிர யாரும் அறியாதது!

அப்பா.. நான் ஒன்னு கேட்டா தப்ப எடுத்துக்க மாட்டீங்களே...

இல்லப்பா சொல்லு..

நான் உங்ககிட்ட எதையும் மறச்சதில்லப்பா.. இப்பவும் நீங்க எனக்கு ஒரு நல்ல நண்பர்..அப்பறம் தான் அப்பா.. 

இவன் இப்படியெல்லாம் பேசுபவன் இல்லையே என அப்போதே கதிரேசன் மனதில் பொறி தட்டியது!

சொல்லுப்பா ஹரி.. உனக்கு ஏதாவது பிரச்சனையா..??

அதுவந்து... நான் ஒரு பொண்ண விரும்பறேன்..

அதை சொல்லி முடிப்பதற்குள் நெஞ்சம் படபடத்துப் போய்.. முகம் முழுதும் வியர்வைப் பூக்கள் பூத்திருந்தன அவனுக்கு.

அப்பா.. நான் இப்படி பேசறேன்னு தப்ப நினைக்காதீங்க.. நான் அந்த பொண்ண பத்து வருஷமா நினைச்சுகிட்டு இருக்கேன்...நான் ஆறாவது படிக்கும் போது என் கூட படிச்சா... எங்க காதல் வயசு சம்மந்தப்பட்டது மட்டுமில்ல... மனசும் சம்மந்தப்பட்டது!   இப்பவும் உங்களுக்குப் பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன்... அவ பேரு அனிதா. நம்ம ஊரு தான்.. நல்லப் பொண்ணுப்பா.. 

தொடர்ந்து பேசியவன் திடீரென்று ஒரு நொடி நிறுத்திவிட்டு அப்பாவின் பதிலுக்காக காத்திருந்தான்.. அவர் பேசவில்லை..

அப்பா.. நான் ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க. அவ வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிடாங்க.. நீங்க தான் உதவனும் பா... 

எனக்கு வேலையும் கிடைச்சிருச்சி.. படிப்பு முடிஞ்சதும் வேலைக்குப் போய் உங்களையும் அம்மாவையும் நிச்சயம் நல்ல வச்சுப்பேன். ப்ளீஸ் பா... என்றவனின் கண்களில் கண்ணீர் மல்கியது!

டேய் ஹரி... என்ன இது... வீட்ல சொல்லாம ஓடிப் போய் வாழ்க்கைய அழிசுக்குற பசங்க மத்தியில.. உன்ன நினைச்சா பெருமையா இருக்கு... பத்து வருசமா அவள காதலிக்கறேன்னு நீ சொன்ன போதே உங்க காதல் மேல எனக்கு மதிப்பு வருது.. நான் வேணுனா கிராமத்து மனுஷனா இருக்கலாம்.. ஆனா மனுஷங்களையும் மனசையும் புரிஞ்சுக்கக் கூடிய சக்தி ஓரளவுக்கு இருக்குடா...

ஆமா.... பள்ளிக்கூடத்துக்குப்  படிக்க போனியா இல்லே... என்று அப்பா நிறுத்த... வெட்கத்தில் லேசாய் தலைக் குனிந்து சிரித்துக் கொண்டான்..

"வாழ்கையை பற்றி ஒன்றுமே தெரியாது உனக்கு" என தான் சொல்லி அனுப்பிய பிள்ளையா இன்று இத்தனை அறிவோடும் அக்கறையோடும் முடிவெடுக்கிற நிலைக்கு வந்திருக்கிறான் என்று நினைத்து ஆனந்தப்பட்டார்  கதிரேசன்!